எல்.ஜி. கம்ப்யூட்டர் மானிட்டர்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் கொரியாவின் எல்.ஜி. நிறுவனம் வீடியோகேம் பிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கம்ப்யூட்டர் மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது.
48 அங்குல அளவில் ஓலெட் திரையைக் கொண்டதாக இவை வந்துள்ளன. 4-கே ரெசல்யூஷனை வெளிப்படுத்தும் வகையில் ஓலெட் திரையைக் கொண்டுள்ளது. வீடியோகேம் விளையாடுவோருக்கு வசதியாக ஹெட்போனை பயன்படுத்துவதற்கேற்ற இணைப்பு வசதி கொண்டதாக வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.31 ஆயிரத்திலிருந்து ஆரம்பமாகிறது.