லெனோவா யோகோ 9 ஐ லேப்டாப்
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் லெனோவா நிறுவனம் 13-வது தலைமுறை யோகா 9 ஐ மாடல் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.;
இதில் இன்டெல்கோர் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை லேப்டாப்பாகவும், டேப்லெட்டாகவும் பயன் படுத்த முடியும். இது 14 அங்குல ஓலெட் தொடு திரையைக் கொண்டுள்ளது.
இது 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. நினைவகம் கொண்டது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 75 வாட் அவர் பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் வரை செயல்படும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,57,320.