ஐடெல் மேஜிக் செல்போன்
ஐடெல் நிறுவனம் வயதானவர்கள் பயன்படுத்துவதற்கேற்ற விலை குறைவான செல்போனை அறிமுகம் செய்துள்ளது. மேஜிக் எக்ஸ் பிளே மற்றும் மேஜிக் எக்ஸ் என்ற பெயரில் இவை அறிமுகமாகியுள்ளன.
இவை 4 ஜி வோல்டே செயல்தளத்தில் இயங்குபவை. உள்ளீடாக இசை மற்றும் உரையாடல் பகிர்வுக்கான செயலி (லெட்ஸ்சாட்) வசதி இதில் உள்ளது. மேலும் பூம்பிளேயும் உள்ளது. இதன் மூலம் திரைப்பட பாடல்கள் மற்றும் பக்தி பாடல் இசைகளை கேட்க முடியும். இது 1.77 அங்குல திரையைக் கொண்டது.
மேஜிக் எக்ஸ் மாடல் 2.4 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இரண்டிலுமே பண்பலை வானொலி வசதி உள்ளது. இதில் 1900 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு வசதியாக பின்புறம் கேமராவும் உள்ளது. இதில் 48 எம்.பி. ரேம் மற்றும் 128 எம்.பி. நினைவகம் உள்ளது. இதை 64 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும். டார்ச் வசதி உள்ளது. இவற்றின் விலை சுமார் ரூ.2,999 மற்றும் சுமார் ரூ.2,299 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.