75 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் முதல் பயணம்..!

புதிய எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் முதல் பயணத்தில், 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆசாதி-சாட் ஐக் கொண்டு செல்லும்.

Update: 2022-08-05 09:33 GMT

புதுடெல்லி,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் சிறிய விண்ஏவுதல் வாகனமான, செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தை (எஸ்எஸ்எல்வி) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரோ சார்பில் எஸ் எஸ் எல் வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.அதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் எஸ் எஸ் எல் வி செயற்கைகோள் தயாரிக்க இஸ்ரோ புதிய முயற்சியை கையாண்டுள்ளது. நாடு முழுவதும் 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளைக் கொண்டு செயற்கைக்கோள் மென்பொருள்களை தயாரிப்பதற்காக தேர்வு செய்தது. இதில் நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகளில் 750 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர் .

பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ஆகியவற்றுக்குப் பிறகு எஸ்எஸ்எல்வி ராக்கெட் இஸ்ரோவின் மூன்றாவது ஏவுதல் வாகனமாகும்.

இஸ்ரோவின் மிகச்சிறிய ஏவுகணை வாகனமான எஸ்எஸ்எல்வி டி-1 ஆனது, இந்தியா முழுவதும் உள்ள 75 கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து பெண் குழந்தைகள் குழுவால் உருவாக்கப்பட்ட 75 சிறிய மென்பொருட்களை சுமந்து செல்லும், 8 கிலோ எடையுள்ள மைக்ரோசாட்லைட் ஆசாதி-சாட் செயற்கைக்கோளை சுமந்து செல்லும்.

சென்னையை தளமாகக் கொண்ட அமைப்பு, நிதி ஆயோக் உடன் இணைந்து இப்பணியை வழிநடத்தியது. அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள 75 பள்ளிகளில் இருந்து தலா 10 பெண்களை (8 முதல் 10 ஆம் வகுப்பு வரை) தேர்ந்தெடுத்து, சிறிய சோதனைகளை உருவாக்க அவர்களுக்கு பயிற்சி அளித்தனர், பின்னர் அவை செயற்கைக்கோளில் ஒருங்கிணைக்கப்பட்டன.

இவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி மூலமாக இஸ்ரோ உதவியது. அனைவரின் உதவியோடு மாணவிகள் இந்த மென்பொருளை தயார் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

பள்ளி மாணவிகள் தயாரித்த இந்த மென்பொருள் வான்வெளி உயரம், தட்பவெட்பம், ஈரப்பதம் ஆகியவற்றில் எவ்வாறு இயங்கும் என்பது தொடர்பான ஆய்வில் மாணவிகள் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாணவிகள் தயார் செய்த மென்பொருள் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் 75 பள்ளிகளில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்ட மென்பொருள் மூலம் வருகிற ஏழாம் தேதி எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிசெயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பி வைக்கிறார்.

110-டன் எடை கொண்ட எஸ்எஸ்எல்வி மிகச்சிறிய வாகனம். மற்ற ஏவுகணை வாகனத்திற்கு தற்போதைய 70 நாட்கள் காலத்தைப் போல அல்லாமல் இதை ஒருங்கிணைக்க 72 மணிநேரம் மட்டுமே ஆகும். இது 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல முடியும் மற்றும் 1,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும்.

புதிய எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் முதல் பயணத்தில் இந்தியா முழுவதும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆசாதி-சாட் ஐக் கொண்டு செல்லும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இது இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஓஎஸ்- 2 ஒன்றையும் சுமந்து செல்லும்.

Tags:    

மேலும் செய்திகள்