உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் முதலிடம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மாணவி நடாஷா பெரியநாயகம். உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-02-19 08:40 GMT

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் திறமையான இளைஞர்களுக்கான மையம் (சி.டி.ஒய்) நடத்திய போட்டிகளில் நடாஷா தனது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

நடாஷா பெரியநாயகம்

உலகெங்கிலும் உள்ள 76 நாடுகளில் இருந்து 15,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட நிலையில், 27 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி பட்டியலில் 13 வயதான நடாஷா முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதிலுமிருந்து மிகவும் சுறுசுறுப்பான மாணவர் களையும் அவர்களது வயதைத் தாண்டிய புத்திக்கூர்மையையும் அடையாளம் காண சி.டி.ஒய். ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு சோதனைகளை நடத்துகிறது.

நியூஜெர்சியில் உள்ள புளோரன்ஸ் பள்ளியில் படித்து வரும் நடாஷா, 2021-ல் நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினார். அப்போது 5-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நடாஷா 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி அளவிற்கு புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஸ்காலஸ்டிக் ஆப்டிட்யூட் டெஸ்ட் (எஸ்.ஏ) மற்றும் ஏ.டி. தேர்வுகளில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலமாக தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

"இது வெறும் சோதனை மட்டுமல்ல, மாணவர்களின் சாதனைக்கான அங்கீகாரம். இது அவர்களின் கண்டுபிடிப்பு, கல்வியின் மீதான காதல் மற்றும் இளம் வயதிலேயே அவர்கள் பெற்ற அறிவைப் பற்றியது" என்று போட்டி அமைப்பாளரில் ஒருவரான டாக்டர் எமி ஷெல்டன் கூறியுள்ளார்.

நடாஷாவின் பெற்றோர் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைச் சேர்ந்தவர்கள். தற்போது தொழில் ரீதியாக அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். நடாஷாவுக்கு ஓவியம் வரைவது, புத்தகங்கள் படிப்பது மற்றும் ஜே.ஆர்.ஆர். டோல்கீன் நாவல்களை டூடுலிங் செய்வது பிடிக்கும் என அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள 76 நாடுகளில் இருந்து 15,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட நிலையில், 27 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி பட்டியலில் 13 வயதான நடாஷா முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்