குளிர்காலத்தில் கண்கள் உலர்வடைந்தால்...

குளிர்காலத்தில் கண்கள் வறண்டு போகின்றனவா? பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை இதுவாகும்.

Update: 2022-11-20 10:05 GMT

குளிர்காலத்தில் கண்கள் வறண்டு போகின்றனவா? பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை இதுவாகும். குளிர் காலத்தில் நிலவும் ஈரப்பதம், குளிர் காற்று, குளிர் வெப்பநிலை போன்ற காரணங்களால் கண்கள் உலர்வடையலாம்.

குளிர் காலங்களில் ஹீட்டரை அடிக்கடி பயன்படுத்துவதும் கண் வறட்சிக்கு வழிவகுக்கலாம். கண்களில் அரிப்பு ஏற்படுதல், கண்கள் சிவப்பு நிறத்துக்கு மாறுதல், கண்கள் மங்கலாக காட்சி அளித்தல், கண்களில் காயம் ஏற்படுதல், அதிக வெளிச்சத்தை பார்க்கும்போது கண்கள் கூசுதல் போன்றவை கண்கள் உலர்வடைவதற்கான அறிகுறிகளாகும்.

தடுக்கும் வழிகள்:

* கண்கள் வறட்சி அடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை அடிக்கடி உட்கொள்ளலாம்.

* குளிர்காலத்தில் வீசும் காற்று கண்கள் வறட்சிக்கு வித்திடும் என்பதால் வெளி இடங் களுக்கு செல்லும்போது கண்ணாடிகள் அணிவது பாதுகாப்பானது. சன் கிளாஸ் அணிவதும் சிறந்தது.

* குளிர்காலத்தில் ஹேர் டிரையர் பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும். அதில் இருந்து வெளிப்படும் வெப்ப காற்று கண்களை நேரடியாக பாதிக்கும். கண் வறட்சிக்கு வழிவகுக்கும்.

* குளிர்காலத்தில் ஹீட்டர் பயன்படுத்தி வென்னீரில் குளிப்பது உடலுக்கு இதமளிக்கும். எனினும் அடிக்கடி வென்னீர் பயன்படுத்தினால் கண்கள் வறண்டு போக வாய்ப்புள்ளது.

* கண்களில் போதுமான அளவு கண்ணீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அடிக்கடி கண்களை சிமிட்டுவது நல்லது. அது கண்கள் வறட்சி அடைவதை தடுப்பதற்கு வித்திடும்.

* குளிர்காலத்தில் தண்ணீர் பருக மறக்கக்கூடாது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதும் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். போதுமான அளவு தண்ணீர் பருகுவது கண்கள் உலர்வடைவதை தடுக்க உதவும்.

* கண்களை ஈரப்பதமாக வைத்திருக்க, கண் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சொட்டு மருந்து பயன்படுத்தலாம். கண்களில் வலி, அழுத்தம், கண் சோர்வு போன்ற பிரச்சினைகள் தொடர்ந்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியமானது. 

Tags:    

மேலும் செய்திகள்