ஹோண்டா வேரியோ 160 மேக்ஸி ஸ்கூட்டர்

ஹோண்டா நிறுவனம் ஸ்கூட்டர் பிரிவில் புதிய மாடலை அறிமுகம் செய்து இப்பிரிவில் தனது விற்பனை சந்தையை விரிவுபடுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.

Update: 2022-06-16 09:30 GMT

இதன்படி வெளிநாடுகளில் அறிமுகமாகி பிரபலமாகத் திகழும் வேரியோ 160 மேக்ஸி ரக ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. ஸ்போர்டியான தோற்றப் பொலிவைக் கொண்டதாக இது உள்ளது. கருப்பு, வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

இதில் லிக்விட் கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 15.4 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். அதேபோல 13.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். இது சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 46.9 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 1,929 மி.மீ. நீளமும், 679 மி.மீ. அகலமும், 1,088 மி.மீ. உயரமும் கொண்டது.

இதன் சக்கரங்கள் 1,277 மி.மீ. விட்டம் கொண்டவை. இது எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் எல்.இ.டி. பின்புற விளக்குகளைக் கொண்டது. இன்டிகேட்டர் மற்றும் பகலில் ஒளிரும் டி.ஆர்.எல். விளக்குகளும் எல்.இ.டி.யால் ஆனவையே. முன்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. எரிபொருள் செலவை துல்லியமாகக் காட்டும் டிரிப் வசதி, ஆயில் மாற்ற வேண்டியதை அறிவுறுத்தும் வசதி ஆகியன இதில் உள்ளன. புளூடூத் இணைப்பு மற்றும் நேவிகேஷன் வசதி கொண்டது. டெலஸ்கோப்பிக் போர்க் முன்புறமும், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பரும் கொண்டது. இதில் இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி தரப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்