பேட்டரி வர்த்தக வாகனம் `ஸ்விட்ச்'

ஹிந்துஜா குழும நிறுவனம் பேட்டரியில் இயங்கும் சரக்கு போக்குவரத்துக்கான வாகனங்களைத் தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளது.

Update: 2023-01-26 16:15 GMT

கார், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங் கள் இப்போது பெருமளவில் பேட்டரியில் இயங்கக் கூடியவையாக அறிமுகமாகி வருகின்றன. சுற்றுச் சூழலை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு பசுமை வாகனங்களை தயாரிக்கும் முயற்சியில் பெரும்பாலான நிறுவனங்கள் தீவிரம் காட்டு கின்றன. அந்த வரிசையில் ஹிந்துஜா குழும நிறுவனம் பேட்டரியில் இயங்கும் சரக்கு போக்குவரத்துக்கான வாகனங் களைத் தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளது.

இத்தகைய வாகனங்கள் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. சரக்குகளை ஏற்றிச் செல்லும் இலகு ரக வாகனமாக இது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ. தூரம் வரை ஓடியுள்ளது. தானியங்கி செயல்பாடுகளை அதிக அளவில் கொண்ட முன்னேறிய தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல வாகனத்தின் இருப்பிடத்தை கண்காணிக்கும் வசதியும் இதில் உள்ளது. இது 2 டன் முதல் 4.5 டன் வரையிலான சுமையை இழுத்து செல்லும் திறன் கொண்டது. இந்த இலகு ரக சரக்கு வாகனம் `ஸ்விட்ச்' விரைவிலேயே வர்த்தக ரீதியிலான விற்பனைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்