மாடலிங் துறையில் 70 வயதிலும் அசத்தும் 4 பேரக்குழந்தைகளின் பாட்டி

பெவர்லியின் இரண்டாவது திருமணமும் வெற்றிபெறவில்லை. 1995 ஆம் ஆண்டில், பெவர்லி நடிகர் கிறிஸ் நோர்த் உடன் ஐந்து ஆண்டுகள் காதலில் இருந்தார்.பின்னர், பெவர்லி கிறிஸைவிட்டு பிரிந்தார்.

Update: 2023-01-07 07:49 GMT

வாஷிங்டன்

எதையாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால், அதை அடைவதை யாராலும் தடுக்க முடியாது . ஹாலிவுட் சூப்பர் மாடல் பெவர்லி ஜான்சன் இதேபோன்ற ஒன்றைச் செய்துள்ளார்.

அக்டோபர் 1952 இல் பிறந்த பெவர்லி ஜான்சன் ஒரு அமெரிக்க மாடல், நடிகை, பாடகி மற்றும் தொழிலதிபர் ஆவார்.1974 ஆம் ஆண்டில், அமெரிக்கன் வோக்கின் அட்டைப்படத்தில் தோன்றிய முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மாடல் .1974 ஆம் ஆண்டு பிரெஞ்சு எல்லே இதழின் அட்டைப் பக்கத்தில் தோன்றிய முதல் கறுப்பினப் பெண் இவர்.

பெவர்லி இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். 1971 ஆம் ஆண்டில், அவர் ரியல் எஸ்டேட் அதிபர் பில்லி போர்ட்டரை முதல் முறையாக திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு 19 வயது.இருப்பினும், திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பெவர்லி விவாகரத்து பெற்றார்.இதன் பிறகு, 25 வயதில், பெவர்லி இரண்டாவது முறையாக. தயாரிப்பாளர் டேனி சிம்ஸை திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்கள் கழித்து டேனியும் பெவர்லியும் பிரிந்தனர். தயாரிப்பாளர் டேனி சிம்ஸ் மூலம் அவருக்கு அனன்சா என்ற மகள் இருக்கிறார்.இவருக்கு 4 குழந்தைகள் உள்ளது.


பெவர்லியின் இரண்டாவது திருமணமும் வெற்றிபெறவில்லை. 1995 ஆம் ஆண்டில், பெவர்லி நடிகர் கிறிஸ் நோர்த் உடன் ஐந்து ஆண்டுகள் காதலில் இருந்தார்.பின்னர், பெவர்லி கிறிஸைவிட்டு பிரிந்தார்.

பெவர்லி 1970 ஆம் ஆண்டு 70 களில், மாடலிங் உலகில் நுழைந்தார். அந்த நேரத்தில் பேஷன் துறையில் சிகப்பு தோல் மற்றும் நீல நிற கண்கள் கொண்ட பெண்கள் மட்டுமே விரும்பப்பட்டனர்.அவரது பயணத்தின் ஆரம்பம் பெவர்லிக்கு கடினமாக இருந்தது, ஆனால் அவர் தனக்கு என ஒரு இடத்தை உருவாக்கி கொண்டார்.

இருப்பினும், பல ஆடை வடிவமைப்பாளர்கள் அவளை நிராகரித்தனர். ஆனால் பெவர்லி யாரைப்பற்றியும் கவலை கொள்ளவில்லை.வெறுப்பாளர்களுக்கு வெறுப்பைக் கொடுக்க அவருக்கு நேரம் இல்லை.அவர் தனது கடின உழைப்பால் மாடலிங் துறையில் பெரிய இடத்தை பெறத் தொடங்கினார். தனது தொடர்பு ஏஜென்சிகளை மாற்றி, தனது குழுவை மாற்றி, படிப்படியாக உயரத்தைத் தொடத் தொடங்கினார்.

இன்று பெவர்லிக்கு 70 வயதாகிறது. அவர் தற்போதும் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார்.உடற்தகுதியை அவர் தொடர்ந்து பராமரித்து வருகிறார்.அவர் தியானம், மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.காலை உணவாக எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்.மதிய உணவு மற்றும் இரவு உணவில் இறைச்சி மற்றும் வேகவைத்த காய்கறிகளை சாப்பிடுகிறார்.அவருக்கு இனிப்பு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அவர் எப்போதும் லஸ்சி (இனிப்பு சுவை கொண்ட தயிர்) சாப்பிட விரும்புகிறார்.

70 வயதில், பெவர்லியின் தோல் மிகவும் இறுக்கமாகத் உள்ளது. இதற்கு காரணம் தோல் பராமரிப்பு . அறுவை சிகிச்சைகள் மூலம் அவர் தனது தோலைப் பராமரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்