போர்ஸ் அர்பானியா வேன்

புனேயைச் சேர்ந்த போர்ஸ் மோட்டார் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான நவீன வசதிகள் கொண்ட வேனை `அர்பானியா’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-12-08 20:05 IST

இதில் மூன்று வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 11 பேர் பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் பெரிய மாடலில் 17 பேர் பயணிக்க முடியும். டில்டிங் வசதி கொண்ட ஸ்டீயரிங் சக்கரம், அருகிலேயே கியர் மாற்றும் லீவர், 7 அங்குல எல்.சி.டி. தொடு திரை, உள்ளீடாக புளூடூத் இணைப்பு வசதி, ஆண்ட்ராய்டு, ஆப்பிள் கார் பிளே, ரியர் பார்க்கிங் வசதி, என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, சாயும் வகையிலான இருக்கை வசதி கொண்டது. இது 115 பி.ஹெச்.பி. திறனை வெளியிடும்.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.29.50 லட்சம் முதல் ஆரம்பமாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்