தூசு அலர்ஜியை கட்டுப்படுத்தும் உணவுகள்
‘டஸ்ட் அலர்ஜி’ எனப்படும் தூசுக்களால் பரவும் நோய் பாதிப்புக்கு ஆளாகு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த தூசு ஒவ்வாமை காரணமாக மூக்கு ஒழுகுதல் தும்மல், காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பாதிப்புகள் நேரும்.;
இத்தகைய அறிகுறிகளை எதிர்த்து போராடக்கூடிய, நோய் பாதிப்பை குறைக்கக்கூடிய சூப்பர் உணவுகள் உங்கள் பார்வைக்கு..
* கிரீன் டீ வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தக்கூடியது. நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மூக்கில் ஏற்படும் எரிச்சலையும் போக்கக் கூடியது.
* மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது. பல்வேறு மருத்துவ குணங்களும் நிரம்பப்பெற்றது. இதனை சூடான பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
* தேன் பல்வேறு நன்மைகளை வழங்கும் மற்றொரு சிறந்த சூப்பர் உணவு வகையை சேர்ந்தது. இது அழற்சி எதிர்ப்பு அறிகுறிகளை குறைக்க உதவும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒவ்வாமை அறிகுறிகளை குறைக்கவும் தேனை போன்றே லவங்கப்பட்டையையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் போன்ற நட்ஸ் வகைகள் ஊட்டச்சத்து மதிப்பு மிக்கவை. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன.
* தக்காளியில் லைகோபீன் என்ற சேர்மம் உள்ளது. அதுதான் தக்காளிக்கு பிரகாசமான சிவப்பு நிறத்தை அளிக்கிறது. மேலும் லைகோபீன் உடல் செல்களை பாதுகாக்கக்கூடியது. சேதமடைந்த சரும செல்களை குணப்படுத்தக்கூடியது.
* தூசு ஒவ்வாமையால் சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க இஞ்சி உதவும்.
* வெங்காயத்தில் ஹிஸ்டமைன் என்ற சேர்மம் உள்ளது. ஹிஸ்டமைன் என்பது ஒவ்வாமைக்கு எதிர்வினையாக உடல் வெளியிடும் ஒருவகை சேர்மமாகும்.
* இஞ்சியைப் போன்றே பூண்டுவும் இந்திய மற்றும் தெற்கு ஆசிய உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் சூப்பர் உணவாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிக ரிக்கச் செய்யும்.
* கோழிக்கறியில் புரதச்சத்து நிறைந்துள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் துணை புரியக் கூடியது. சிக்கன் சூப் பருகுவதன் மூலம் நோய் எதிப்பு சக்தியை தக்க வைத்துக்கொள்ளலாம்.
* சால்மன் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளடங்கி இருக்கின்றன. அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டவை.