கிர்கிஸ்தானில் குதிரை பால் சீசன்! குமிஸ் பானம் தயாரிக்கும் பணி மும்முரம்

கிர்கிஸ்தானின் தியான் ஷான் மலைகளில், குமிஸ் எனப்படும் புளித்த பானம் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

Update: 2022-08-16 16:30 GMT

பிஷ்கெக்(கிர்கிஸ்த்தான்),

மத்திய ஆசியாவில் உள்ள கிர்கிஸ்தானின் தியான் ஷான் மலைகளில், குமிஸ் எனப்படும் புளித்த பானம் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. குமிஸ், அங்குள்ள நாடோடி பழங்குடியினரின் உணவுகளில் ஒரு முக்கிய பகுதியாகும்.

உலகின் ஏழு மலை அமைப்புகளில் ஒன்றாக உள்ள தியன் சான் மலைத்தொடரில், சுமார் 3000 ஆண்டுகளாக பனிப்பாறைகள் உருகி வழியும் நீரால் விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும், மற்றும் அப்பகுதியில் உள்ள வன உயிரிகளுக்கும் நீராதாரமாக விளங்குவதோடு, அப்பிராந்தியம் முழுவதும் பசுமையான புல்வெளிகள் நிறைந்த வசீகரிக்கும் காட்சிகளால் வெகுவான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துள்ளது.

கிர்கிஸ்தானின் சுசாமிர் பள்ளத்தாக்கு இந்த பானத்தின் தாயகமாக விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 2,500 மீட்டர் (8,200 அடி) உயரத்தில் உள்ள பள்ளத்தாக்கு, குளிர்காலத்தில் பல மீட்டர் ஆழமான பனியால் மூடப்பட்டிருக்கும். கோடைகால முடிவில், இந்த பள்ளத்தாக்கு பசும்புல்வெளிகளால் மூடப்பட்டிருக்கும். இது குதிரைகளுக்கு சிறந்த உணவாக அமையும்.

அங்குள்ள புல் மற்றும் மூலிகைகள், அவற்றை மேயும் குதிரைகளுக்கு சிறந்த உணவாக அமைந்து, அந்த குதிரைகளில் இருந்து கறக்கும் பாலுக்கு ஒரு குறிப்பிட்ட தனி சுவையை கொடுக்கிறது என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

அதன்பின் கறந்த குதிரை பாலை அது சிறிது மதுபானம் ஆகும் வரை புளிக்க விடப்படுகிறது. பசுவின் பால் கூட இந்த பானம் தயாரிக்க பயன்படுத்தப்படலாம், ஆனால் அது தாழ்வானதாக கருதப்படுகிறது. குதிரையின் பாலில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் உள்ளது, இது புளிக்க வைக்க மிகவும் ஏற்றது என்று அவர்கள் கூறுகின்றனர்.


நீண்ட காலமாக இந்த நடைமுறை பழக்கத்தில் உள்ளது. இது குறித்து கிர்கிஸ் நாட்டு மருந்துப் பேராசிரியர், ருஸ்தம் துக்வாட்ஷின் கூறுகையில், குமிஸ் என்ற பானம், இரத்த அணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் உடலை நச்சுத்தன்மையை நீக்குகிறது என்று தெரிவித்தார். மேலும், குமிஸ் பானம் தயாரிப்பு உச்சத்தில் இருக்கும் போது நான் சூசாமி பள்ளத்தாக்கு பகுதிக்கு வருவதை தவறவிடுவதில்லை என்று ஆவலுடன் கூறுகிறார்.

இந்த பானத்தையும் அதன் சுவையையும் அங்குள்ள மக்கள் எந்த அளவுக்கு விரும்புகின்றனர் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று. கிர்கிஸ்தானின் பிற பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் இப்பகுதியின் குமிஸ் பானத்தால் ஈர்க்கப்பட்டு அதை பருகுவதற்காக இங்கு படையெடுக்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக 'யுர்ட்ஸ்' எனப்படும் மரத்தால் ஆன பெரிய கூடாரங்கள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மேஜைகளில் குமிஸ் விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. மக்கள் இந்த பானத்தை வாங்கி பருகி அங்கு ஓய்வெடுத்து செல்வது வழக்கமாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்