பயணத்தின்போது..

நீண்ட தூரம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மேக்கப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட மாய்ஸ்சுரைசர் போன்ற சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் சரும பராமரிப்பு பொருட்களை அவசியம் கையாள வேண்டும்.

Update: 2022-06-26 14:54 GMT

வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மேக்கப் போடும் வழக்கத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பின்பற்றுகிறார்கள். ஏனெனில் பயணத்தின்போது காற்றின் தரம், அதில் படிந் திருக்கும் ஈரப்பதம், வெப்ப நிலை, சூரிய ஒளியில் இருந்து உமிழப்படும் கதிர் வீச்சுகள் போன்றவை சரும வறட்சி, சரும வெடிப்பு, சிவத்தல், முகப்பரு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். அதில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு மாய்ச்சுரைசர் போன்ற சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது அவசியமானது.

பயணத்திற்கு புறப்படும்போது சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வதுடன் அதனை உடன் எடுத்து செல்லவும் மறக்காதீர்கள். ஏனெனில் பயணத்தின்போது வீசும் வெளிப்புற காற்று சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி முன்கூட்டியே வயதான தோற்றத்தை உண்டாக்கிவிடும். அதனை தவிர்க்க மாய்ஸ்சுரைசரோ, எஸ்.பி.எப் 50 அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட சன்ஸ்கிரீனையோ பயன்படுத்துவது நல்லது.

மாய்ஸ்சுரைசர், சன்ஸ்கிரீன் பூசுவது மட்டுமே சருமத்தின் வறட்சியை தடுக்க உதவாது. பயணத்தின்போது போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வது அவசியம். அது சருமம் வறண்டு போவதை தடுக்க உதவும். நீண்ட தூர பயணமோ, விமான பயணமோ மேற்கொண்டு முடித்ததும் 'ஷீட் மாஸ்க்' எனப்படும் மெல்லிய இழையை சருமத்தில் ஒட்டவைத்து சிறிது நேரம் கழித்து அப்புறப்படுத்தி விடலாம். அது சருமத்திற்கு சிறந்த நண்பனாக விளங்கும்.

ஈரப்பதம் சருமத்திற்கு மட்டுமல்ல உதட்டுக்கும் தேவை. லிப் பாம் பயன்படுத்துவது உதடுகள் உலர்வடைவதை தடுக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்