டுகாடி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டராட்
டுகாடி நிறுவனம் தனது ஸ்கிராம்ப்ளர் மாடல் மோட்டார் சைக்கிளில் நகர்ப்புற மாடலாக அர்பன் மோட்டராடை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.11.49 லட்சம். இது 803 சி.சி. இரட்டை என்ஜினைக் கொண்டது. 73 ஹெச்.பி. திறனை 8,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 65.7 டார்க் இழுவிசையை 5,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும்.
இதில் கயாபா சஸ்பென்ஷன் பயன் படுத்தப்பட்டுள்ளது. 17 அங்குல விட்ட முடிய சக்கரங்களில் பைரெலி டயப்லோ டயர் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஏ.பி.எஸ். பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளின் மொத்த எடை 180 கிலோவாகும்.
இதில் புதிய வண்ணக் கலவை சேர்க்கப்பட்டுள்ளது. முன்புற மட்கார்டுக்கு ஒரு நிறமும், பக்கவாட்டுப் பகுதியில் நெம்பர் பிளேட் உள்ளதாகவும் இது வந்துள்ளது. இதில் எல்.இ.டி. முகப்பு விளக்கு உள்ளது.
இதில் டுகாடி மல்டி மீடியா சிஸ்டம் உள்ளது. இதை ஸ்மார்ட் போனுடன் இணைத்துக் கொள்ளலாம். ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. சாகசப் பயணங் களை விரும்பும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை, சிவப்பு, கருப்பு நிறங்களில் இது கிடைக்கும். இதன் அகலமான ஹேண்டில்பார் சவுகரியமான பயணத்துக்கு ஏற்றதாக உள்ளது.