டி.ஜே.ஐ. ஆர்.எஸ் 3 மினி பயண ஸ்டெபிலைஸர்

கேமரா சார்ந்த பொருட்களைத் தயாரிக்கும் டி.ஜே.ஐ. நிறுவனம், பயணத்தின்போது படங்களை துல்லியமாக எடுக்க உதவும் ஸ்டெபிலைஸரை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-01-19 21:52 IST

இது எடை குறைவானது, வெளியிடங் களுக்கு எடுத்துச் செல்வதும் எளிது. சாகசப் பயணத்தின்போது பயன்படுத்தும் மிரர்லெஸ் கேமராக்களுக்கு ஏற்றதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 800 கிராம்.

இதில் 2 கிலோ எடை வரையிலான கேமராக்களை பொறுத்தலாம். இது காட்சிகளைப் படம் பிடிக்கும் போது கை அசைவுகளால் படம் ஷேக் ஆவதைத் தவிர்க்கலாம். இது புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதனால் கேமராவின் ஷட்டர் வேகத்தை இதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.28 ஆயிரமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்