என்னப்பா சொல்றீங்க...! துருக்கி -சிரியா நிலநடுக்கம் அமெரிக்கா சதியா...?

அமெரிக்க வானிலை ஆயுதம் துருக்கி பூகம்பத்தை ஏற்படுத்தியதாக சதி கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்

Update: 2023-02-11 06:03 GMT

வாஷிங்டன்

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதினானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி - சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனிடையே துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் அமெரிக்காவின் சதியாக இருக்கலாம் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

#எச்ஏஏஆர்பி (HAARP) என்ற ஹேஸ்டேக் நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.இதிலிருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான ரீடுவீட்கள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க வானிலை ஆயுதமான எச்ஏஏஆர்பி துருக்கி பூகம்பத்தை ஏற்படுத்தியதாக சதி கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்

சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ள தகவல்களில் எச்ஏஏஆர்பி என்பது 'ஹை-பிரீக்வென்சி ஆக்டிவ் அரோரல் ரிசர்ச் புரோகிராம்' என்பதைக் குறிக்கிறது. இந்த அமெரிக்க ஆராய்ச்சி 1990களில் இருந்து செயல்பட்டு வருகிறது. இத விமானப்படை ஆராய்ச்சி ஆய்வகம் அலாஸ்காவின் ககோனாவுக்கு அருகில் அமைந்துள்ளது. இப்போது அலாஸ்கா பேர்பேங்க்ஸ் பல்கலைக்கழகத்தால் இயக்கப்படுகிறது.

ரேடியோ கம்யூனிகேஷன் டெக்னாலஜியில் கவனம் செலுத்துவதே இதன் நோக்கம்.இந்த புகழ்பெற்ற தொழில்நுட்பத்தை அமெரிக்க போர்க்கப்பல் செயல்படுத்தியதால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என கூறப்படுகிறது.


ஆனால் இது இயற்கையான நிலநடுக்கம் தான என பலர் மறுத்து வருகின்றனர்.

பிளாட் எர்த் சோன் என்பவர் தனது டுவிட்டரில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையை மேற்கோள் காட்டி

துருக்கியில் நிலநடுக்கத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, வானத்தில் ஒரு விசித்திரமான மேகம் தோன்றியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த மேகத்தையும் பூகம்பத்தின் மையத்தையும் பாருங்கள். இது லெண்டிகுலர் மேகம் என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு இயற்கை நிகழ்வாகும் என கூறி உள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்