எக்ஸ்டென்ட் ஸ்போர்ட் ஸ்மார்ட் கடிகாரம்

போட் நிறுவனம் எக்ஸ்டென்ட் ஸ்போர்ட் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-06-30 15:11 GMT

உடலை பிட்டாக வைத்துக்கொள்ள வசதியாக 700-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சிகள் இதில் உள்ளன. இதில் உள்ள பேட்டரி 7 நாட்கள் வரை செயல்படும் திறன் கொண்டது.

கிரே, கருப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,499. நடனம், கிரிக்கெட், பாலே, ஓட்டம், குத்துச் சண்டை உள்ளிட்ட எதில் ஈடுபட்டாலும் உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை இது துல்லியமாக பதிவு செய்யும். இது தவிர சமையல், ஸ்கேட் போட்டிங், யோகாசனம், விளையாட்டு கருவிகள் இசைப்பது, தோட்ட வேலை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டாலும் உங்கள் உடலின் செயல் பாடுகளை இது துல்லியமாக அளவிடும்.

இதய செயல்பாட்டை 24 மணி நேரமும் கண்காணிக்கும். ஆக்சிஜன் அளவை துல்லியமாக வெளிப்படுத்தும். புளூடூத் இணைப்பு வசதி கொண்ட தாக 1.69 அங்குல ஹெச்.டி. திரையைக் கொண்டதாக வந்துள்ளது. செல்போனுக்கு வரும் அழைப்புகளையும் இது உணர்த்தும்.

Tags:    

மேலும் செய்திகள்