பி.எம்.டபிள்யூ. எம் 1000.ஆர்.ஆர் சிறப்பு எடிஷன்
பி.எம்.டபிள்யூ எம் பிரிவின் 50-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சிறப்பு எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.;
பிரிமீயம் மோட்டார் சைக்கிளில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத் தயாரிப்புகளுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. இந்நிறுவனத்தின் எம் பிரிவின் 50-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சிறப்பு எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
இதில் ஜி.பி.எஸ். அடிப்படையிலான லேப் டைமிங் சிஸ்டம் உள்ளது. கார்பன் பாகங்கள், இலகு ரக ஸ்விங்கிராம் மற்றும் அனோடைஸ்டு அலுமினிய பயன்பாடு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். அதிக பராமரிப்பு தேவைப்படாத, சிறப்பாக செயல்படும் வகையிலான செயின், பின்புற பயணிகள் இருக்கை ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். அழகிய வண்ணத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இது தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் மோட்டார் ஸ்போர்ட் பிரிவானது 1972-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது எம் பிரிவு வாகனங்களைத் தயாரிக்கிறது. இப்பிரிவின் 50-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக இந்த ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.