பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர் அறிமுகம்

சொகுசு மற்றும் பிரீமியம் மாடல் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக எம் 1000 ஆர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-10-20 19:31 IST

200 ஹெச்.பி. திறனை 13.750 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும் மோட்டார் சைக்கிள் இதுவாகும். இது 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இது வழக்கமான எஸ் 1000 ஆர் மோட்டார் சைக்கிளை விட 44 ஹெச்.பி. கூடுதல் திறனை வெளிப்படுத்துகிறது. இருப்பினும் இந்த மாடலின் எடையை விட இது 9 கிலோ குறைவாகும். பெரும்பகுதி கார்பன் பைபர் பாகங்களைக் கொண்டிருப்பதால் எடை குறைவு சாத்தியமாகியுள்ளது.

உறுதியான அதேசமயம் ஸ்திரமான அலுமினிய சக்கரங்கள் மற்றும் எடை குறைவான பேட்டரியும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீறிப் பாயும் வகையிலான வடிவமைப்பு உள்ளதால் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 314 கி.மீ. ஆக உள்ளது.

இதை முழுவதும் இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் குறைந்த எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள் மட்டுமே கிடைக் கும். விலை சுமார் ரூ.42 லட்சம் முதல் ரூ.45 லட்சம்.

Tags:    

மேலும் செய்திகள்