பி.எம்.டபிள்யூ. 630 ஐ எம் ஸ்போர்ட் `ஜோரே எம் எடிஷன்'

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது 6 சீரிஸில் 630 ஐ எம் ஸ்போர்ட் ஜோரே எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-07-14 11:24 GMT

இந்த மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.72,90,000. முன்புறம் கூர்மையாக கிட்னி வடிவ கிரில்லுடன் இது வந்துள்ளது. நீலம், கருப்பு, கிரே, வெள்ளை உள்ளிட்ட கண்கவர் நிறங்கள் கொண்டது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள லேசர் விளக்கு 650 மீட்டர் தொலைவு வரை வெளிச்சமாக்கும். இதில் 19 அங்குல அலாய் சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பொத்தானை தொடுவதன் மூலம் அனைத்து கதவுகளையும் திறக்க முடியும். இரண்டு 10.2 அங்குல தொடுதிரை உள்ளது. ஸ்கிரீன் மிரரிங் வசதி மற்றும் யு.எஸ்.பி. போர்ட் இணைப்பு வசதி கொண்டவை.

இதனால் ஸ்மார்ட்போனிலிருந்து ஸ்கிரீன் மிரரிங் மூலமோ அல்லது யு.எஸ்.பி. மூலமாக காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். ஹர்மான் கோர்டோன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் (ஊபருடன் 16 வாட்) இனிய இசையை வழங்குகிறது. பின்னிருக்கை களும் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. மேற்கூரை இரண்டு பகுதிகளைக் கொண்டது. முன் இருக்கையில் இருப்பவர்களுக்கென்றும், பின்னிருக்கையில் இருப்பவர்களுக்கென்றும் தனித்தனியே மேற்கூரை திறந்து மூடும் வகையிலானது. நான்கு நிலையிலான ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டது. 2 லிட்டர், 4 சிலிண்டர் டுவின் பவர் டர்போ தொழில்நுட்பம் கொண்ட என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 258 ஹெச்.பி. திறனையும், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதை ஸ்டார்ட் செய்து 6.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும். இதில் 8 கியர்கள் உள்ளன. சொகுசான பயணத்துக்கு அடாப்டிவ் 2 ஆக்சில் ஏர் சஸ்பென்ஷன் உள்ளது. 5 விதமான ஓட்டும் நிலைகள் உள்ளன.

சாலையின் தன்மைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். பி.எம்.டபிள்யூ. இயங்குதளம் உடையது. 7 அங்குல திரை, முப்பரிமாண நேவிகேஷன் வசதி, 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே மற்றும் 12.3 அங்குல கண்ட்ரோல் டிஸ்பிளே உள்ளிட்ட திரைகள் உள்ளன. பி.எம்.டபிள்யூ. வர்ச்சுவல் அசிஸ்டென்ட் மூலமாக குரல்வழி கட்டுப்பாட்டில் செயல்படுத்த முடியும். வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் வசதி உள்ளது. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் கொண்டவை. இது தவிர பார்க்கிங் அசிஸ்டென்ட் கேமரா, ரிவர்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. தானியங்கி ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, பிரேக், எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீரிங் இதன் தனித்துவம். 6 ஏர் பேக்குகள் உள்ளன. ஏ.பி.எஸ்., டி.எஸ்.சி., டி.டி.சி. இ.டி.எல்.சி., சி.பி.சி. உள்ளிட்ட வசதிகள் கொண்டது. பக்கவாட்டு மோதல் பாதுகாப்பு வசதி, விபத்து உணர்த்தி, குழந்தைகளுக்கான ஐசோபிக்ஸ் ஆகிய அம்சங்கள் கொண்ட சொகுசு காராக இது வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்