புளூ மாசிவ் ஹெட்போன்

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் புளூ நிறுவனம் மாசிவ் 7 மற்றும் மாசிவ் 8 என்ற பெயரிலான இரண்டு ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-08-05 19:48 IST

தொழில் முறை பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. மாசிவ் 7 விலை சுமார் ரூ.1,749 மற்றும் மாசிவ் 8 விலை சுமார் ரூ.1,799. இவை இரண்டிலுமே சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் உள்ளது.

இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 மணி நேரம் செயல்படும். உள்ளீடாக மைக்ரோ போன் இருப்பதால் அழைப்பு களுக்கு பதில் அளிக்க முடியும். பயணத்தின் போது எடுத்துச் செல்லும் வகையில் மடக்கும் வசதி கொண்டதாக இவை வடிவமைக்கப் பட்டுள்ளன. கருப்பு நிறத்தில் வந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்