இந்தியாவிலும் உணவுப் பஞ்சம் வரும், வேற்று கிரகவாசிகள் வருவார்கள் - பாபா வாங்கா கணிப்புகள்

2022ம் ஆண்டுக்கான பாபா வாங்கா பல்வேறு கணிப்புகளில் 2 சரியாக பலித்திருக்கிறது. இந்த ஆண்டில் அவர் கணித்துள்ள பிற விவரங்கள்

Update: 2022-07-19 10:28 GMT

பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாத இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் அங்கு, பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார். இவர் 50 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும் உள்ளன, நடந்தும் உள்ளன.

அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதேபோன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது. அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் எனவும் கணித்தார்.

இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.

இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். 2019 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் பாபாவை பின்பற்றுவோர் அவரது கணிப்பை நம்புகின்றனர்.

2020ம் ஆண்டில், வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும் கெட்ட நேரம்தான். 2020ல் ரஷிய அதிபர் புதினை கொல்ல முயற்சி நடக்கும். மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்கும் திறன் இழந்து மன நலம் பாதிக்கப்படலாம் அல்லது உயிரிழக்கலாம் என்று கூறி இருந்தார். ஐரோப்பா காணாமல் போகும் என்றும் பாபா கூறியிருக்க, பாபா கூறியது பிரெக்ஸிட்டை மனதில் வைத்துதான் என்றும் மக்கள் கருதுகின்றனர்.

அத்துடன் 2020ல் ஐரோப்பாவை தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களுடன் தாக்குவார்கள் என கூறி இருந்தார். 2021ம் ஆண்டு குறித்தும் வருங்காலம் பற்றிய கருத்துகள் பல பலித்து உள்ளன. 2021ம் ஆண்டில் இந்த உலகம் சில பேரழிவுகளை சந்திக்கும் என்றும், அமெரிக்காவின் 45வது அதிபர் (டொனால்ட் டிரம்ப்) மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும் கூறினார் அது பலித்தது.

2022ம் ஆண்டுக்கான அவரது 6 கணிப்புகளில் 2 முன்பே பலித்து விட்டன. அதன்படி, நடப்பு ஆண்டில் ஆசியாவின் பல நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிப்பு அடைவார்கள் என கணித்துள்ளார். இதன்படியே சரியாக பலித்துள்ளது.

நடப்பு ஆண்டின் பிப்ரவரி மற்றும் ஏப்ரலுக்கு இடைப்பட்ட காலத்தில், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளம் மிக மோசம் வாய்ந்த பேரிடரில் ஒன்றாக அமைந்தது. தென்கிழக்கு குயின்ஸ்லாந்து, வைடு பே-பர்னட் மற்றும் நியூசவுத் வேல்ஸ், பிரிஸ்பேன் உள்ளிட்ட பகுதிகள் உள்பட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வறட்சியால், நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இது ஐரோப்பிய நாடுகளில் தற்போது நடந்து வருகிறது. கிடைத்துள்ள தகவல்களின்படி, தண்ணீர் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்கும்படி போர்ச்சுகல் அரசு தனது நாட்டு குடிமக்களை கேட்டு கொண்டுள்ளது. 1950ம் ஆண்டுக்கு பின்னர் இத்தாலியில் தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ளது.

இதுவரை,2022ம் ஆண்டுக்கான அவரது பல்வேறு கணிப்புகளில் 2 சரியாக பலித்திருக்கிறது. இந்த ஆண்டில் அவர் கணித்துள்ள பிற விவரங்கள் வருமாறு:-

சைபீரியாவில் ஒரு புதிய கொடிய வைரசானது வெளிவரும். வேற்றுகிரக வாசிகளின் படையெடுப்பு நடைபெறும். வெட்டுக்கிளி படையெடுப்பு மற்றும் கணினியின் கற்பனையான உலக பயன்பாட்டில் மக்கள் அதிகம் மூழ்கி இருப்பார்கள் என தெரிவித்து உள்ளார்.

தண்ணீர் பற்றாக்குறை

பாபா வாங்கா 2022 ஆம் ஆண்டிற்கான கணிப்பில் சில நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். எனவே போர்ச்சுகல், இத்தாலி போன்ற நாடுகள் தங்கள் மக்களிடம் நீரை குறைவாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளன. ஏனெனில் 1950-களுக்குப் பிறகு இந்த நாடுகளில் மிகக்குறைந்த அளவில் மழை பெய்து வருகிறது. இத்தாலியும் மிக மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது.

இயற்கை சீற்றங்கள்

2022 ஆம் ஆண்டில் ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்து கூறியிருந்தார். அதோடு நிலநடுக்கம் ஏற்படும் என்றும், சுனாமி ஏற்படும் என்றும் கூறியிருந்தார். இவர் கூறியது போன்றே, ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கனமழை மற்றும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியது. மேலும் பங்களாதேஷ், இந்தியாவின் வடகிழக்கு பகுதி மற்றும் தாய்லாந்திலும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதைப் பார்க்கும் போது பாபா வாங்காவின் கணிப்புகளுள் மற்றொன்றும் நடந்துவிட்டது நன்கு தெரிகிறது.

கொடிய வைரஸ்

2022 ஆம் ஆண்டில் சைபீரியாவில் கொடிய வைரஸ் ஒன்று கண்டறியப்படும் என்று பாபா வாங்கா கணித்து கூறியிருந்தார். மேலும் பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி இந்த வைரஸ் பரவும். அதுமட்டுமின்றி, இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும் என்றும் கணித்து கூறியுள்ளார்.

வெட்டுக்கிளி தாக்குதல்

இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலையான 50 டிகிரி செல்சியஸை எட்டுவதோடு, பயிர்கள் மற்றும் வயல்களை வெட்டுக்கிளிகள் தாக்கும் என்றும், அதனால் நாட்டில் பட்டினி கிடக்கும் வாய்ப்புள்ளது என்றும் பாபா வாங்கா கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் வேற்றுகிரக வாசிகள் 'ஓமுவாமுவா' என்ற சிறுகோள் மூலம் பூமிக்கு வந்து, பூமியில் உள்ள மக்களைத் தாக்கக்கூடும் என்று பாபா வாங்கா தனது கணிப்புகளில் கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் உலகில் மக்கள் கேஜெட்டுகளுக்கு முன் அதிக நேரத்தை செலவிடுவார்கள் என்று பாபா வாங்கா தனது கணிப்பில் கூறியிருந்தார். இந்த மாதிரியான போக்கால் மக்களின் மனநிலை மோசமாக பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவை தவிர, 2023ம் ஆண்டில் பூமியின் சுற்று வட்டபாதையில் மாற்றம் ஏற்படும். 2028ம் ஆண்டில் விண்வெளி வீரர்கள் வெள்ளி கிரகத்திற்கு பயணப்படுவார்கள். 2046ம் ஆண்டில், உறுப்புமாற்று தொழில்நுட்பம் பயனால், மக்கள் 100 வயதுக்கு கூடுதலாக வாழ்வார்கள் என தெரிவித்து உள்ளார். 2100ம் ஆண்டில் இரவு மறைந்து போகும் என தெரிவித்திருக்கிறார். பூமியின் மற்றொரு பகுதி, செயற்கை சூரிய ஒளியால் வெளிச்சம் உண்டாக்க செய்யப்படும். இவரது கணிப்பின்படி உலகம் 5079ம் ஆண்டு முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்