60 வயதில் கொள்ளை அழகு...! 90 வயதிலும் தாய்மை...! ஹன்ஜா பழங்குடியினரின் விசித்திரம்

இந்த பள்ளத்தாக்கின் மலைகளின் அழகைக் காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். இந்த பள்ளத்தாக்கில் 'ஹன்ஜா' சமூகத்தினர் வாழ்கின்றனர்.

Update: 2023-04-10 12:06 GMT

traveljunoon

எப்போதும் இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று எல்லோரும் கனவு காண்கிறார்கள். அதற்கு நீங்கள் 'ஹன்சா பள்ளத்தாக்கில்' பிறந்திருந்தால் உங்கள் கனவும் நனவாகும். ஆனால் அது பாகிஸ்தானில் உள்ளது.

பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஹன்சா பள்ளத்தாக்கும் இடம்பெற்று உள்ளது. பலுசிஸ்தானின் ஹன்சா-நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு. "ஹன்ஜா இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக செல்கிறது. இந்த கிராமம் இளைஞர்களின் சோலை என்றும் அழைக்கப்படுகிறது. புவியியல் ரீதியாக, ஹன்சா பள்ளத்தாக்கு மூன்று பகுதிகளை உள்ளடக்கியது: மேல் ஹன்சா (கோஜல்), மத்திய ஹன்சா மற்றும் கீழ் ஹன்சா (ஷினாகி).

இந்த பள்ளத்தாக்கின் மலைகளின் அழகைக் காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். இந்த பள்ளத்தாக்கில் 'ஹன்ஜா' சமூகத்தினர் வாழ்கின்றனர்.

சிலர் இந்த மக்களை ஐரோப்பிய இனத்துடன் தொடர்புபடுத்துகிறார்கள்.

ஹன்சா பள்ளத்தாக்கு மக்கள் மற்ற மக்களை விட மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்கள்.

ஹன்சா சமூகத்தின் மக்கள் 150 ஆண்டுகள் வரை வாழ்கிறார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதுமட்டுமின்றி இந்த சமூகத்தின் பெண்கள் 90 வயதிலும் தாயாக முடியும், 80 வயது வரை இளமையாக காட்சியளிக்கிறார்கள்.

உடல் ரீதியாக இந்த சமூக மக்கள் மிகவும் வலிமையானவர்கள். இவர்கள் மருத்துவமனைக்கு செல்வதில்லை. இங்குள்ள மக்களின் சராசரி ஆயுட்காலம் 120 ஆண்டுகள். இந்த சமூகத்தின் பெண்களும் உலகின் மிக அழகான பெண்களில்இடம்பெற்று உள்ளார்கள்.

இச்சமூகப் பெண்களின் வயது சுமார் 60-70 ஆக இருக்கும் போது கூட அவர்களின் வயது 20-25 ஆக மதிப்பீடில் இருக்கும்.இந்தப் பெண்கள் அழகாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் இமயமலைப் பனிப்பாறையிலிருந்து உருகிய தண்ணீரைக் குடித்து, அதில் குளிப்பதுதான். இந்த நீரில் மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். "ஹுன்சா மக்கள் தேன் அதிகம் சாப்பிடுகிறார்கள்."

ஹன்சா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 'புருஷோ' என்றும் அழைக்கப்படுகிறார்கள். இங்குள்ள மக்களின் முக்கிய மொழி 'புருஷாஸ்கி'. பாகிஸ்தானின் மற்ற சமூகங்களைக் காட்டிலும் ஹன்சா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் படித்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை ஹன்சா பள்ளத்தாக்கில் 87 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.

இந்த சமுதாய மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். இவர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுவார்கள். இது தவிர, இங்குள்ள மக்கள் சைக்கிள் மற்றும் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை, பெரும்பாலும் கால்நடையாகவே நடந்து செல்கின்றனர்.தினமும் 15 முதல் 20 கிலோமீட்டர் வரை நடைபயிற்சி மற்றும் ஜாகிங் செய்வது அவரது வாழ்க்கைமுறையில் அடங்கும்.அவர்கள் குறைவாக சாப்பிடுகிறார்கள், அதிகமாக நடக்கிறார்கள்.

இங்குள்ள மக்கள் இறைச்சியையும் சாப்பிடுகிறார்கள், ஆனால் மிகக் குறைந்த அளவில், அவர்கள் சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே இறைச்சியை உட்கொள்கிறார்கள்."

இந்த சமூகத்தைப் பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களில் 'தி ஹெல்தி ஹன்சாஸ் (The Healthy Hunzaz) மற்றும்தில் லூஸ்ட் கிங்டம் ஆப்தி ஹிமாலயாஸ் (The Lost Kingdom of the Himalayas) போன்ற முக்கிய புத்தகங்கள் அடங்கும். இந்நூல்களில் இச்சமூகத்தின் வாழ்க்கை முறை சித்தரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்