ஏ.எஸ்.யு.எஸ். ஜென்புக் லேப்டாப்
கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான ஏ.எஸ்.யு.எஸ் நிறுவனம் புதிதாக ஜென்புக் புரோ 14 மாடல் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.;
இதில் 12-ம் தலைமுறை இன்டெல் பிராசஸர்கள் உள்ளன. ஓலெட் திரையைக் கொண்ட இந்த லேப்டாப்பின் விலை சுமார் ரூ.1,44,990. இத்துடன் விவோபுக் புரோ 15 ஓலெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை சுமார் ரூ.89,990. மேலும் விவோபுக் புரோ 16 எக்ஸ் ஓலெட் மாடல் விலை சுமார் ரூ.1,59,990.
இதில் பிரீமியம் மாடலில் 1 டி.பி. வரையிலான நினைவகத்தை விரிவாக்கும் வசதி உள்ளது. மேலும் அதிக திறன் கொண்ட ஹெச்.டி. வெப் கேமரா, ஹார்மன் கார்டோன் ஸ்பீக்கர் ஆகியவற்றுடன் விரல் ரேகை உணர் சென்சார் ஸ்கேனர் உள்ளது. மேலும் 140 வாட் திறன்கொண்ட விரைவாக சார்ஜ் ஆகும் வசதி உள்ளது.