ஆம்பியர் ஸீல் இ.எக்ஸ். பேட்டரி ஸ்கூட்டர்
சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர்களை ஆம்பியர் நிறுவனம் ஸீல் இ.எக்ஸ். என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.;
இதன் விலை சுமார் ரூ.75,000. இரட்டை வண்ணங்களில் இது கிடைக்கும். இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 120 கி.மீ. தூரம் வரை ஓடும். அதற்கேற்ப இதில் 2.3 கிலோவாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
கிரே, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 55 கி.மீ. ஆகும். பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 5 மணி நேரம் ஆகும். இதன் அதிகபட்ச திறன் 1,800 வாட் ஆகும். பக்க வாட்டு ஸ்டாண்டு போட்டிருப்பதை உணர்த்தும் சென்சார் வசதி கொண்டது. முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க் உள்ளது. இரண்டு சக்கரங்களும் டிரம் பிரேக் வசதி கொண்டது.