காற்று மாசுபாடு காரணமாக நுரையீரல் பாதிப்புகளுடன் இதய நோய்களும் அதிகரிக்கும்..! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

நாடு முழுவதும் தீபாவளிக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், காற்று மாசுபாடும் தலை தூக்கியுள்ளது.

Update: 2022-10-23 12:10 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் தீபாவளிக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், காற்றின் தர பிரச்சனையும் தலை தூக்கியுள்ளது. டெல்லியில் காற்றுத் தரக் குறியீடு சனிக்கிழமை மாலை 266ஐ எட்டியது.

காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் படி, சனிக்கிழமை மாலை ஒட்டுமொத்த டெல்லி பிராந்தியத்தில் சராசரி காற்றின் தரக் குறியீடு 'மோசமான' பிரிவில் 266 ஆக பதிவாகியுள்ளது. இதனால், தீபாவளியன்று காற்றின் தரம் மேலும் மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது.டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி(என்.சி.ஆர்) மக்கள் விஷக் காற்றை சுவாசிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் தலைவர் டாக்டர் அசோக் சேத் இது குறித்து கூறுகையில், "காற்று மாசுபாடு நுரையீரல் பிரச்சனைகளுடன் தொடர்புடையது. காற்று மாசுபாடு அதிகரிப்பது காரணமாக இதயம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்பதை புறக்கணிக்க கூடாது.

கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்களிடையே இதய நோய் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். இது காற்று மாசுபாட்டால் ஏற்படுகிறது என்று நான் நம்புகிறேன். இது கடந்த 20 ஆண்டுகளில் மோசமாகிவிட்டது.

இளைஞர்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது இதயவியல் துறையின் அனைத்து அதிகாரபூர்வ அறிவியல் அமைப்புகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.காற்று மாசுபாடு இதயத் தமனிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இதயத்தை எவ்வாறு சேதப்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

காற்று மாசுவில் மிகவும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளன மற்றும் நுரையீரலில் இருந்து இரத்த நாளங்களுக்குச் செல்லும் பொருட்கள், கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் போன்ற வாயு பொருட்களும் உள்ளன. நைட்ரஸ் ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு என இவை அனைத்தும் தீங்கு விளைவிக்கும் பொருட்களாகக் கருதப்படுகின்றன.இவை இதயத் தமனிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த துகள்கள் இரத்த ஓட்டத்தின் மூலம் நுரையீரலைச் சென்றடையும் போது இதயத் தமனிகள் வீக்கமடைகின்றன. இதனால் இரத்தம் உறைதல் மற்றும் மாரடைப்பு மற்றும் இதய தமனிகளுக்கு சேதம் விளைவிக்கும். இது கொலஸ்ட்ரால் மற்றும் பிற இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இந்த மாசு துகள்கள் மீண்டும் இரத்தத்தில் கலந்து இதய தாளத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது மற்றும் இதயத் துடிப்பைப் பாதிக்கிறது. சில சமயங்களில், இது திடீர் மரணத்தையும் கூட ஏற்படுத்துகிறது.

பண்டிகை நாட்களில் மிக மோசமான சூழலை நாம் காணப் போகிறோம், இது கவனிக்கப்பட வேண்டும் என்பதை உணர வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். தீபாவளியின் போது பட்டாசுகள் எரியும். மரக்கட்டைகளை எரிப்பதை நிறுத்துவதற்கான தீர்வுகள் அல்லது வழிகாட்டுதல்கள் அல்லது கொள்கைகள் கூட இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இவை அனைத்தும் நுரையீரல் நோய்கள் மற்றும் மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்