ஏசர் ஆண்ட்ராய்டு டி.வி.

கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஏசர் நிறுவனம் புதிதாக ஹெச் மற்றும் எஸ் சீரிஸ் பிரிவில் ஆண்ட்ராய்டு டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-09-30 08:49 GMT

இதில் 60 வாட் திறன் கொண்ட ஹை-பை புரோ ஆடியோ சிஸ்டம் உள்ளது. 32 அங்குலம், 43 அங்குலம், 50 அங்குலம், 55 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவுகளிலான திரைகளைக் கொண்டதாக இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 1.5 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. நினைவகம் கொண்டதாக சிறிய திரையைக் கொண்ட டி.வி.க்கள் வந்துள்ளன.

எஸ் சீரிஸில் வந்துள்ள 65 அங்குல மாடல் டி.வி.யில் 50 வாட் திறன் கொண்ட ஹை-பவர் சவுண்ட்பார், டால்பி அட்மோஸ் சிஸ்டம், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. உள்ளீடாக கூகுள் குரோம்காஸ்ட் பயன் படுத்தப்பட்டுள்ளது. ஹெச் சீரிஸில் 43 அங்குலம், 50 அங்குலம் மற்றும் 55 அங்குல டி.வி.க்கள் வந்துள்ளன. இவற்றில் 60 வாட் ஹை-பை புரோ ஸ்பீக்கர் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது.

32 அங்குல டி.வி. விலை சுமார் ரூ.14,999. 43 அங்குல மாடல் விலை சுமார் ரூ.29,999. 50 அங்குல மாடல் விலை சுமார் ரூ.34,999. 55 அங்குல மாடல் விலை சுமார் ரூ.39,999. 65 அங்குல மாடல் விலை சுமார் ரூ.64,999.

Tags:    

மேலும் செய்திகள்