நன்மை தரும் நாவல்பழம்
நாவல்பழத்தில் கால்சியம் அதிகமாக உள்ளது. அதனால் எலும்பு வலுப்பெறும். வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
வைட்டமின்-சி சத்தும் மிகுதியாக இருப்பதால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது. தோல்களில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும். வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும். பசியைத் தூண்டும். கல்லீரல் மற்றும்
மண்ணீரல் நோய்களை தடுக்கும். நாவல்பழத்தில் ஆன்டி-ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சர்க்கரையின் அளவை குறைக்கும். நார்ச்சத்து நிறைந்த பழங்களில் நாவல்பழமும் ஒன்று.