அன்னபூர்ணா சிகரம்

இமயமலையில் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஒன்று அன்னபூர்ணா-1. நேபாளத்தில் அமைந்துள்ள இந்த சிகரம் 8 ஆயிரத்து 91 மீட்டர் உயரம் கொண்டது.

Update: 2019-11-22 13:27 GMT
சிகரத்தின் செங்குத்தான தெற்க முக பக்கத்தில் ஏறுவது மிகவும் கடினமானதாகும். சிரமம் நிறைந்த அன்னபூர்ணா மலையேற்றம் 1950-ல் வெற்றிகரமாக முடிவடைந்தது. பிரான்சை சேர்ந்த மவுரைஸ் ஹெர்சோக் என்பவர் முதன் முதலில் இந்த சிகரத்தின் உச்சியை அடைந்து சாதித்தார்.

இதுவரை இந்த சிகரத்தில் 3 முறை மட்டுமே வெற்றிகரமாக உச்சியை அடைந்துள்ளனர். ஒரு மலையேற்றம் எதிர்பாராத விபத்தினால் தோல்வியில் முடிவடைந்தது. கடந்த 2014-ம் ஆண்டு குழுவாக மலையேற்றம் செய்த 39 பேர் மரணம் அடைந்தனர். இது மலையேற்ற பேரழிவாக கருதப்படுகிறது.

அன்னபூர்ணா சிகரத்தில் அவ்வளவாக பனி படர்ந்து காணப்படவில்லை. இதன் சிகரங்களில் மரங்களும், விலங்கினங்களும் பரவலாக காணப்படுகின்றன. பனிச்சிறுத்தை, நீல செம்மறி ஆடுகள் மற்றும் பலவித பறவைகள் இந்த சிகரத்தின் சிறப்பு உயிரினங்களாகும்.

மேலும் செய்திகள்