‘கிளிசரின்’ உதடுகள்..

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு, உலர்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கு கிளிசரின் நிவாரணம் தரும். உதடு உலர்வடைவதை தடுத்து ஈரப்பதத்தை தக்க வைக்க இது உதவும்.;

Update:2018-12-23 17:49 IST
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு கிளிசரினை பஞ்சில் முக்கி உதடுகளில் தடவி வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வருவதன் மூலம் உதடுகள் உலர்ந்து போவதை தவிர்க்கலாம்.

உதடுகள் மிருதுவாகவும், இளஞ்சிவப்பு நிறத்திலும் காட்சியளிப்பதற்கும் கிளிசரினை பயன்படுத்தலாம்.

சுற்றுச்சூழல் மாசுபாடு, முறையான பராமரிப்பு இன்மை போன்ற காரணங்களால் சிலருடைய உதடுகள் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள் தினமும் கிளிசரின் பயன்படுத்தலாம். தொடர்ந்து கிளிசரின் தடவி வருவதன் மூலம் உதடுகள் மென்மையாகும். அதேவேளையில் தரமான கிளிசரினை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

வறண்ட உதடுகளால் சிலருக்கு தொந்தரவுகள் ஏற்படும். உதடு வெடிப்பு, அரிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகள் நேரும். அதனால் உதடுகளின் உள் அடுக்குகளும் பாதிப்புக்குள்ளாகும். அதற்கு தீர்வு காண்பதற்கு டாக்டரிடம் ஆலோசனை பெற்று பிரத்யேக கிரீம்களை பயன்படுத்தலாம்.

நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்களுக்கு உதடுகள் உலர்ந்து காணப்படும். உதடுகள் உணர்திறன் மிக்கவை. அவைகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உதடு வெடிப்பு, உதட்டு வலி பிரச்சினைகளை தவிர்க்க கிளிசரினை பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்வது நல்லது.

கிளிசரினை பயன்படுத்துவதன் மூலம் உதடுகளில் படிந்திருக்கும் இறந்த செல்களும் நீங்கிவிடும். புதிய செல்களின் வளர்ச்சிக்கும் கிளிசரின் அவசியமானது.

மேலும் செய்திகள்