பிரான்சில் இரும்பு மனிதன் டிரையத்லான் போட்டி; வெற்றிகரமுடன் முடித்த நாசிக் காவல் ஆணையாளர்

பிரான்சில் நடந்த இரும்பு மனிதன் டிரையத்லான் போட்டியை நாசிக் நகர காவல் ஆணையாளர் வெற்றிகரமுடன் முடித்துள்ளார்.

Update: 2018-08-28 09:11 GMT

நாசிக்,

பிரான்ஸ் நாட்டில் இரும்பு மனிதன் டிரையத்லான் சர்வதேச போட்டி கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது.  இது 180 கி.மீ. தூரம் சைக்கிளிங் செய்வது, 4 கி.மீ. தூரம் நீச்சல் அடிப்பது மற்றும் 42 கி.மீ. தூரத்திற்கு மராத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்வது ஆகிய போட்டிகளை உள்ளடக்கியது.

இந்த போட்டியில் நாசிக் நகர காவல் ஆணையாளர் ரவீந்தர் குமார் சிங்கால் (வயது 53) கலந்து கொண்டார்.  அவர் இந்த போட்டியை 15 மணிநேரம் மற்றும் 13 நிமிடங்களில் கடந்து வெற்றிகரமுடன் முடித்துள்ளார்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு முன்னர் கடந்த வாரம் விரிவான பயிற்சியை சிங்கால் மேற்கொண்டார்.

இதற்கு முன் நடிகர் மிலிந்த் சோமன் கடந்த 2015ம் ஆண்டு நடந்த டிரையத்லான் போட்டியில் கலந்து கொண்டு அதனை வெற்றிகரமுடன் முடித்துள்ளார்.  கடந்த வருடம் மகாராஷ்டிர மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கிருஷ்ண பிரகாஷ் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்