காமன்வெல்த் ஆடவர் இரட்டையர் பிரிவு பேட்மிண்டனில் இந்தியா வெள்ளிப்பதக்கம்

காமன்வெல்த் ஆடவர் இரட்டையர் பிரிவு பேட்மிண்டனில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. #CWG2018

Update: 2018-04-15 06:25 GMT
கோல்டுகோஸ்ட்,

காமன்வெல்த் ஆடவர் இரட்டையர் பிரிவு பேட்மிண்டனில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர்.

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இந்த விளையாட்டு திருவிழாவின் 11-வது நாளான இன்று இந்தியா பதக்க வேட்டையை தொடர்ந்து வருகிறது.

காமன்வெல்த் போட்டியில் இன்று பேட்மிண்டன் இறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி-சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் மார்கஸ் எல்லீஸ்-சிரிஸ் லான்கிரிட்ஜ் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இங்கிலாந்து ஜோடி 21-13, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதனால் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இதன் மூலம் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

மேலும் செய்திகள்