ஜல்னா கோவிலில் பழமையான 6 சாமி சிலைகள் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஜல்னாவில் கோவிலில் இருந்து பழமையான சாமி சிலைகளை திருடி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-08-22 13:39 GMT

மும்பை, 

ஜல்னாவில் கோவிலில் இருந்து பழமையான சாமி சிலைகளை திருடி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

சாமி சிலைகள் திருட்டு

ஜல்னாவில் பழமையான ஜம்ப்சமர்த் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பழமையான ராமர், சீதா, லெட்சுமணன், அனுமன் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த சிலைகள் 1535-ம் ஆண்டை சேர்ந்தவை என கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை கோவில் பூசாரி வழக்கம் போல பூஜை செய்ய சென்றார். அப்போது, கோவிலில் இருந்த 6 சாமி சிலைகள் மாயமாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்தநிலையில் கோவில் சிலை காணாமல் போன தகவல் பரவியதை அடுத்து அங்கு அதிகளவில் பக்தர்கள் திரண்டனர்.

பொதுமக்கள் அதிர்ச்சி

இதற்கிடையே மாவட்ட சூப்பிரண்டு அக்சய் ஷிண்டே சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர்கள் மாயமான சிலைகளை விரைவில் மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போலீசார் கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

ஜல்னாவில் கோவிலில் இருந்து பழமையான சிலைகள் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்