2019-ம் ஆண்டு முதல் மராட்டியத்தை அதிர வைத்த அரசியல் பூகம்பங்கள்

மராட்டியத்தில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு அடுத்தடுத்து நடந்த அரசியல் பூகம்பங்கள்.

Update: 2023-07-02 19:15 GMT

மராட்டியத்தில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு அடுத்தடுத்து அரசியல் பூகம்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 2019-ல் சிவசேனா, பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவி பிரச்சினையில் சிவசேனா கட்சி பா.ஜனதாவுடனான உறவை முறித்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது. அந்த நேரத்தில் அஜித்பவார், தேவேந்திர பட்னாவிசுடன் அதிகாலை நேரத்தில் ராஜ்பவனில் பதவி ஏற்று புதிய ஆட்சி அமைத்தது மராட்டியத்தில் சமீப காலங்களில் நடந்த முதல் அரசியல் பூகம்பமாக பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்து பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரியானது தேசிய அளவில் டிரென்ட் ஆனது.

இந்தநிலையில் அதே பாணியில் அஜித்பவாரும், சரத்பவாருக்கு எதிராக கட்சியை உடைத்து சிவசேனா-பா.ஜனதா அரசுக்கு ஆதரவு அளித்து உள்ளார். அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்து மாநில அரசுக்கு ஆதரவு அளித்து துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று இருப்பது மற்றொரு பூகம்பமாக மராட்டியத்தை அதிர வைத்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்