புனேயில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் போலீஸ் பலி

புனே பாராமதி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி பெண் போலீஸ் டெங்கு காய்ச்சலுக்கு பலி

Update: 2022-09-21 04:15 GMT

புனே,

புனே பாராமதி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வந்தவர் சீத்தல். நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்திற்காக விடுமுறை எடுத்து ஆஸ்பத்திரியில் சேர்ந்து இருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெண் போலீஸ் சீத்தல் உயிரிழந்தார்.

இந்த தகவல் பற்றி அறிந்த போலீசார் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். புனே மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக 41 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 509 பேர் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்