சி.எஸ்.எம்.டி.- சோலாப்பூர், ஷீரடி சேவைக்காக புதிய வந்தே பாரத் ரெயில்கள் மும்பை வர உள்ளன

சி.எஸ்.எம்.டி.- சோலாப்பூர், ஷீரடி சேவைக்காக 2 புதிய வந்தே பாரத் ரெயில்கள் மும்பை வர இருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-02 18:45 GMT

மும்பை, 

சி.எஸ்.எம்.டி.- சோலாப்பூர், ஷீரடி சேவைக்காக 2 புதிய வந்தே பாரத் ரெயில்கள் மும்பை வர இருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதிய சேவை

பிரதமர் மோடி வருகிற 10-ந் தேதி மும்பை சி.எஸ்.எம்.டி. - சோலாப்பூர் மற்றும் சி.எஸ்.எம்.டி. - ஷீரடி இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். மும்பை - சோலாப்பூர் வந்தே பாரத் ரெயில் சிகரங்கள், பள்ளத்தாக்குகள் உள்ள போர் காட் (கா்ஜத் - கண்டாலா இடையேயான மலைப்பகுதி) இடையே இயக்கப்பட உள்ளது. ஷீரடி ரெயில் தல் காட் வழியாக இயக்கப்பட உள்ளது.

இதற்காக அந்த பகுதியில் வந்தே பாரத் ரெயில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

2 புதிய ரெயில்கள்

வழக்கமாக இந்த வழித்தடத்தில் ரெயில்கள் 'பேங்கர்கஸ்' மூலம் இயக்கப்படும். ஆனால் வந்தே பாரத் ரெயில் 'பார்கிங் பிரேக்' தொழில்நுட்பத்துடன் இயக்கப்பட உள்ளது. மும்பை - சோலாப்பூர், ஷீரடி சேவைக்காக 2 புதிய வந்தே பாரத் ரெயில்கள் சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து மும்பை வர உள்ளது.

இதில் ஒரு ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வர உள்ளது. மற்றொரு வந்தே பாரத் ரெயில் 6-ந் தேதி மும்பை வரும் என மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்