பழைய பொருட்கள் குடோனில் தீ

மான்கூர்டில் பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

Update: 2022-06-09 15:37 GMT

மும்பை, 

மும்பை மான்கூர்டு மண்டலா குடிசைப்பகுதியில் பழைய பொருட்கள் குடோன் ஒன்றில் இன்று காலை 10 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பற்றிய தீ மள மள வென பொருட்கள் மீது பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 8 வாகனங்கள், 4 தண்ணீர் டேங்கருடன் விரைந்து வந்தனர். அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்