ஜாமீன் கேட்டு அனில்தேஷ்முக் மனு

முன்னாள் மந்திரி அனில்தேஷ்முக் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2022-06-08 13:51 GMT

மும்பை, 

முன்னாள் மந்திரி அனில்தேஷ்முக் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மாமூல் வழக்கு

மராட்டிய உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் மாதந்தோறும் மும்பையில் உள்ள பார், ஓட்டல்களில் ரூ.100 கோடி மாமூல் வசூல் செய்ய போலீசாரை கட்டாயப்படுத்தியதாக முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் கடந்த ஆண்டு குற்றம்சாட்டினார்.

இதையடுத்து இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. எனவே அனில்தேஷ்முக் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

ஜாமீன் கேட்டு மனு

இந்தநிலையில் சி.பி.ஐ. அவருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அனில்தேஷ்முக் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் சி.பி.ஐ. தாக்கல் செய்த 59 பக்க குற்றப்பத்திரிகை முழுமையாக முடிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அனில்தேஷ்முக் தற்போது நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்