சாமியார் வீட்டில் புகுந்து ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது

சாமியார் வீட்டில் புகுந்து ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை அடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-08 13:52 GMT

அம்பர்நாத்,

சாமியார் வீட்டில் புகுந்து ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை அடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகை, பணம் கொள்ளை

உல்லாஸ்நகரை சேர்ந்தவர் சாமியார் சுவாமி தாமா ராம்சாகிம் தார்பார். கடந்த மாதம் 30-ந்தேதி ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த சாமியாரின் மகனை தாக்கி விட்டு தங்கநகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் போன்றவற்றை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.

இது பற்றி விட்டல்வாடி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து 8 தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடிவந்தனர்.

4 பேர் கைது

தானே மற்றும் ராய்காட் மாவட்டம் தானே மும்ரா மற்றும் கல்யாண் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு நடத்தினர். இதில் கொள்ளை கும்பல் பயன்படுத்திய கார் பதிவெண் அடையாளம் தெரியவந்தது. இந்த கார் மும்ராவில் இருப்பதாகவும், இதன் உரிமையாளர் அக்பர் இமான்கான் என்பது தெரியவந்தது.

போலீசார் கார் உரிமையாளரை கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் உள்பட கூட்டாளிகள் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொடுத்த தகவலின்படி போலீசார் ஆசிப் வாரிஸ் அலி, சிவ்லிங் வீர்சிங், ராகுல்சிங் ஆகிய மேலும் 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்