அங்காடியா ஊழியர்களை மிரட்டி ரூ.33 லட்சம் நகை கொள்ளையடித்த 3 பேர் கைது - பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள்

அங்காடியா ஊழியர்களை மிரட்டி ரூ.33 லட்சம் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

Update: 2023-06-30 20:00 GMT

மும்பை, 

அங்காடியா ஊழியர்களை மிரட்டி ரூ.33 லட்சம் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கொள்ளை

மும்பை கல்பாதேவியில் உள்ள அங்காடியாவில் கடந்த மாதம் 27-ந்தேதி மாலை புனே மற்றும் கோலாப்பூருக்கு கொண்டு செல்ல பார்சல்களை ஊழியர்கள் காரில் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது நிலேஷ் திவாரி, சில்வராஜ் காலா, அபிராஜ் கிலாரி ஆகிய 3 பேர் அங்காடியா அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த ஊழியர்களை மிரட்டினர். பின்னர் நகைகள் அடங்கிய பார்சலுடன் தப்பி சென்றனர். கொள்ளை போன பார்சலின் மதிப்பு ரூ.33 லட்சத்து 45 ஆயிரம் ஆகும்.

3 பேர் கைது

இதுபற்றி லோக்மான்ய திலக் மார்க் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். போலீசில் பிடிபட்ட நிலேஷ் திவாரி மீது ஏற்கனவே கொலை, வழிப்பறி, வன்முறை சம்பவம் தொடர்பாக 4 வழக்குகளும், சில்வராஜ் மீது மோக்கா சட்டம் உள்பட 17 வழக்குகளும் பதிவாகி உள்ளது தெரியவந்தது. சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் கொள்ளை அடித்த 3 பேர் போலீசில் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்