சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1½ கோடி இழப்பீடு - தீர்ப்பாயம் உத்தரவு

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரூ.1 கோடியே 49 லட்சத்தை இழப்பீடாக வழங்க தீர்பாயம் உத்தரவிட்டது.

Update: 2023-07-26 19:45 GMT

தானே, 

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரூ.1 கோடியே 49 லட்சத்தை இழப்பீடாக வழங்க தீர்பாயம் உத்தரவிட்டது.

விபத்தில் உயிரிழப்பு

புனேயில் உள்ள சிஞ்சேவாடி பகுதியை சேர்ந்தவர் சவுரப் ஸ்ரீவஸ்தவா. இவர் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு மே 21-ந் தேதி புனே- மும்பை விரைவு சாலையில் தனது காரில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த தனியார் பஸ் அவரது கார் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இழப்பீடு

இந்த நிலையில் அவரது மனைவி சுப்ரா ஸ்ரீவஸ்தாவா மற்றும் அவரது 2 குழந்தைகள் சார்பில் காப்பீட்டு நிறுவனம் மற்றும் வாகன உரிமையாளரிடம் இருந்து ரூ.1 கோடியே 49 லட்சம் இழப்பீடாக கேட்டு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த தொகை அதிகப்படியாக இருப்பதாக காப்பீட்டு நிறுவனம் சார்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் காப்பீடு நிறுவனம் மற்றும் பஸ் உரிமையாளர் இணைந்து ரூ.1 கோடியே 49 லட்சத்தையும், மேலும் வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து அதற்கு 7 சதவீத வட்டியும் சேர்த்து 2 மாதங்களுக்குள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்