தலைவர்கள் குறித்து இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த தலைவர்கள் குறித்து இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி கூறினார்.;
கோலார் தங்கவயல்:
உற்சாக கொண்டாட்டம்
நாட்டின் 75-வது சுதந்திர தின பவளவிழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிராமங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் வீடுகளில் தேசிய கொடி பறக்க விடப்பட்டன. 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தை முன்னிறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதேபோல் கோலார் தங்கவயல் நகரசபை மைதானத்தில் தாலுகா நிர்வாகம் சார்பில் சுதந்தி்ர தினவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ. ரூப்ாகலா சசிதர் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி, நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி, பஞ்சாயத்து நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை அணிவித்து மரியாதை
நிகழ்ச்சியின்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி, அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், அங்கு வந்தவர்
களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பின்னர் போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி பேசுகையில் கூறியதாவது:-
உலக நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னோடியாக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நாம் விமரிசையாக கொண்டாடி உள்ளோம். நாம் சுதந்திரம் பெறுவதற்கு பல தலைவர்கள், போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளனர். இளைய தலைமுறையினர், விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.