நகைக்கடை உரிமையாளரை செருப்பால் தாக்கிய பெண்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நகைக்கடை உரிமையாளரை பெண் ஒருவர் செருப்பால் தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

Update: 2023-10-17 18:45 GMT

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே டவுன் பகுதியை சேர்ந்தவர் முகமது அன்வர். இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு 15 வயது மகளுடன் பெண் ஒருவர் நகை வாங்குவதற்காக வந்திருந்தார். அப்போது முகமது அன்வர் நகையை காண்பிப்பதாக கூறி, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து அந்த சிறுமி, தனது தாயிடம் கூறினார். இதை கேட்டு கோபமடைந்த அந்த பெண், நகைக்கடை உரிமையாளர் முகமது அன்வரை செருப்பால் சரமாரியாக தாக்கினார். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் இதை கூறினார். இதை கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், நகைக்கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் இதுகுறித்து தரிகெரே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும், அவர்களிடம் முகமது அன்வரை ஒப்படைத்தனர். இதையடுத்து முகமது அன்வரை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்