சிக்கமகளூரு நகரசபை சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

செப்டம்பர் 23-ந்தேதி வரை சிக்கமகளூரு நகரசபை சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்;

Update: 2022-08-30 17:14 GMT

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு நகரசபை தலைவரும், ஆசாத் பூங்கா விநாயகர் அறக்கட்டளை தலைவருமான வரசித்தி வேணுகோபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிக்கமகளூரு நகரசபை சார்பில் இன்று(புதன்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி வரை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. ராமேஸ்வரர் கோவில் வளாகத்தில் பந்தல் அமைத்து விநாயகர் சிலை வைத்து நாள்தோறும் பூஜித்து வழிபாடு நடத்தப்படும். மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், ஆடல்-பாடல் நடத்தப்படும். அன்னதானம் வழங்கப்படும். கடைசி நாளான 23-ந்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி தெண்டரமக்கி குளத்தில் விஜர்சனம் செய்யப்படும்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிக்கமகளூரு நகரில் விநாயகர் சிலை மற்றும் பூஜைபொருட்கள் விற்கும் வியாபாரிகளிடம், வாரச்சந்தை டெண்டர் காரர்கள் வரி வசூலித்துள்ளனர். இதையறிந்ததும் அவர்களை கண்டித்து நடவடிக்கை எடுத்து வரியாக வசூலித்த பணத்தை வியாபாரிகளிடம் திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்