மண்டியாவுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாளை மறுநாள் வருகை

மண்டியாவுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாளை மறுநாள்(11-ந்தேதி) வருகிறார். இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் அஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-08 17:37 GMT

மண்டியா:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகை

மண்டியாவுக்கு, நாளை மறுநாள்(11-ந் தேதி) முதல்-மந்திரி பசவராஜ் வருகை தர இருக்கிறார். முதல்-மந்திரி வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அஸ்வதி தலைமையில் நடந்தது. அப்போது கலெக்டர் அஸ்வதி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கூறியதாவது:-

மண்டியாவில் மாவட்ட அளவில் 11,679 சுய உதவி மையங்கள், 233 ஒன்றிய சுய உதவி மையங்கள் உள்ளது. இதில் மொத்தம் 1,62,392 பேர் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட இருக்கிறது. மேலும் என்.ஆர்.எல்.எம் மற்றும் என்.யு.எல்.எம். திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிப்பது குறித்த புதிய திட்டங்கள் தொடக்க விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதல்-மந்திரி, மண்டியா வருகிறார்.

அடிப்படை வசதிகள்

இதனால் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மேடைகள் மற்றும் நாற்காலிகள், அலங்கார தோரணங்கள் மற்றும் குடிநீர், உணவு மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை செய்திருக்கவேண்டும். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களின் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கவேண்டும். மேலும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்