பெண் வக்கீலை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேர் கைது

மங்களூருவில் பெண் வக்கீலை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-14 18:45 GMT

மங்களூரு-

மங்களூருவில் பெண் வக்கீலை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வக்கீல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு தேரலகட்டே பகுதியை சேர்ந்தவர் முபீதா ரகுமான். இவர் வக்கீல் ஆவார். இந்தநிலையில், மங்களூரு டவுன் பகுதிக்கு முபீதா வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து பொந்தல் பகுதிக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது டவுன் பஸ் ஒன்று வந்தது. இதையடுத்து முபீதா பஸ்சில் ஏற சென்றார். ஆனால் அதற்குள் டிரைவர் பஸ்சை இயக்கினார்.

இதையடுத்து கண்டக்டர் அவரை கையை பிடித்து பஸ்சில் ஏற்றினார். பின்னர் பஸ் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. அப்போது கண்டக்டர் முபீதாவிடம் பஸ் புறப்படும் முன் பஸ்சில் ஏற முடியாதா? என கேட்டுள்ளார். அதற்கு நான் ஏறுவதற்குள் பஸ் புறப்பட்டது என கூறினார். இதனால் கோபமடைந்து கண்டக்டர் முபீதாவை தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார்.

சமாதானம்

மேலும் பஸ்சை விட்டு இறங்கும்படி கண்டக்டர் அவரை கூறியுள்ளார். ஆனால் முபீதா மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது டிரைவரும் முபீதாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதையடுத்து பஸ்சில் இருந்த சக பயணிகள் முபீதா மற்றும் கண்டக்டரை சமாதானம் செய்தனர். பின்னர் இருவரும் சமாதானம் ஆகினர்.

இதையடுத்து முபீதா இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் அவர் இறங்கி சென்றார். பின்னர் கண்டக்டர், டிரைவர் ஆகிய 2 பேரும் என்னிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி மங்களூரு போலீசில், முபீதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கண்டக்டர் பரத் சலியான், டிரைவர் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் மங்களூரு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்