பிரேக் பிடிக்காததால் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்
பிரேக் பிடிக்காததால் அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது.;
பெங்களூரு:
பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு கர்நாடக அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். பெங்களூரு புறநகர் மாவட்டம் டாபஸ்பேட்டை அருகே வரும்போது திடீரென்று பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் சாலையோர தடுப்பு கம்பியில் மோதிய பஸ், அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. அவா்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை என்றாலும், டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.