உணவு வினியோகிப்பவர் சுருண்டு விழுந்து சாவு
பெங்களூருவில் உணவு வினியோகிப்பவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.;
பெங்களூரு:
பெங்களூரு வடேரஹள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ்குமாா். இவர், ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் உணவு வினியோகிப்பாளராக இருந்து வந்தார். ஆர்.ஆர்.நகர் அருகே பெமல் லே-அவுட்டில் உள்ள ஒரு உணவகத்தில், உணவுகளை வாங்கி செல்வதற்காக சந்தோஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளுடன் காத்து நின்றார். அப்போது திடீரென்று கீழே சுருண்டு விழுந்து உயிர் இழந்தார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிர் இழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சந்தோஷ்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான், அவரது சாவுக்கான சரியான காரணம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆர்.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.