பெங்களூருவில் பிரதமர் மோடி இருந்த 4½ மணி நேரத்திற்கு ரூ.24 கோடி செலவு

பெங்களூருவில் பிரதமர் மோடி இருந்த 4½ மணி நேரத்திற்கு ரூ.24 கோடி செலவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2022-06-21 22:11 IST

பெங்களூரு:

பிரதமர் மோடி நேற்று முன்தினம் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்தார். அவர் 20-ந் தேதி பகல் 12 மணியளவில் பெங்களூரு வந்தார். இந்திய அறிவியல் கழகம், பொருளாதார பல்கலைக்கழகம், கொம்மகட்டாவில் திட்ட பணிகள் தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டார். அவர் 12 மணிக்கு வந்து 4.30 மணிக்கு மைசூருவுக்கு புறப்பட்டு சென்றார். அவர் நகரில் 4½ மணி நேரம் மட்டுமே இருந்தார்.

இதையொட்டி அவர் பயணித்த ஹெப்பால் மேம்பாலம், பெங்களூரு பல்கலைக்கழகம், கொட்டட்டா ஆகிய சாலைகளுக்கு புதிதாக தார் போடப்பட்டது. சாலையின் மத்தியில் உள்ள தடுப்புகள் புதுப்பிக்கப்பட்டது. அந்த சாலைகளில் தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டன. சாலைகளுக்கு தார் போடும் பணிக்கு ரூ.14 கோடியும், மற்ற பணிகளுக்கு ரூ.10 கோடியும் என மொத்தம் ரூ.24 கோடி செலவு ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதி பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரி மற்றும் கமிஷனரின் நிதியில் இருந்து எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்