மாரிகுப்பம் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாதத்தையொட்டி மாரிகுப்பம் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை ஏராளமான மக்கள் பங்கேற்பு

Update: 2023-10-24 18:45 GMT

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயல் மாரிகுப்பம் எல்லைக்குட்பட்ட பகுதியில் தூய மரியன்னை கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பதி ஏழுமலையான் சன்னதி உள்ளது. இங்கு பிரதான சாமியாக பெருமாள் வீற்றுள்ளார். இந்த கோவிலில் புரட்டாசி மாதங்களில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு இந்த பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது பெருமாள் சாமிக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு காலை 7 மணிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு இந்த பணிகள் முடிந்தது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு சாந்தி பூஜை நடத்தப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி கோவில்களில் இருந்த அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த புரட்டாசி மாத பூஜையில் கோலார் தங்கவயல் மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்